மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமை உறுப்பினர்களுக்கு 40 % மானியம் வழங்கப்பட இருப்பதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 40 சதவிதம் மானியத்தை மீன்களை வளர்க்கின்றவர்களின் மேம்பாட்டின் முகமை சார்ந்த உறுப்பினர் அனைவருக்கும் வழங்க இருப்பதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். இது பற்றி கலெக்டர் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் கூறியதாவது, 2021-22 ஆம் வருடம் தேசிய வேளாண்மை அபிவிருத்தித் திட்டம் மற்றும் மத்திய அரசு பங்களிப்பு திட்டத்தின் கீழாக இம்மாவட்டத்தில் இருக்கும் மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமை உறுப்பினர்களாக சேர்ந்த கடந்த மூன்று வருடங்களில் இத்திட்டத்தின் கீழ் மானியம் பெறாத உறுப்பினர்கள் தங்களது குளங்களில் மீன் வளர்ப்பு செய்வதற்காக உள்ளீடு செலவிற்கு 40 % மானியம் வழங்கப்பட இருக்கிறது.
இந்நிலையில் மீன் வளர்ப்பில் ஆர்வம் இருக்கும் பயனாளிகளால் ஏற்கனவே 1000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டிருக்கும் பண்ணை குட்டைகளை புனரமைத்திடவும், உள்ளீடு செலவினமான கூட்டு மீன் வளர்ப்பில் இந்திய பெருங்கெண்டை மீன்களுடன் நன்னீர் விரால் வளர்ப்பினை ஊக்குவித்தல் திட்டத்திற்கு ஆகின்ற செலவில் 62,500-ல், 25,000 ரூபாய் மானியமும், பாலித்தீன் உறைகளிட்டு மீன் வளர்த்தல் திட்டத்திற்கு ஆகின்ற செலவில் 1,85,500-ல், 75,000 மானியமும் மற்றும் விரால் மீன் வளர்ப்பிற்கு இடுபொருள் வழங்கும் திட்டத்திற்கு ஆகின்ற செலவில் 75,000-ல், 30 ஆயிரம் மானியம் வழங்கப்பட இருக்கின்றது.
இதனை அடுத்து விருப்பமுள்ளவர்கள் வேலூர் காட்பாடி காந்தி நகர் 5-வது மேற்கு குறுக்கு தெருவில் இருக்கும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு உரிய விண்ணப்பத்தை பெற்று விண்ணப்பித்துக் கொள்ளலாம். இதனைத் தொடர்ந்து விண்ணப்பங்கள் அதிகமாக பெறப்படும் பட்சத்தில் முன்னுரிமை மற்றும் தகுதியின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள். பின்னர் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற 20-ஆம் தேதி என கலெக்டர் கூறியுள்ளார். மேலும் விவரங்களுக்கு [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் தெரிந்து கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.