Categories
மாநில செய்திகள்

நெல்லை மக்களுக்கு செம தகவல்…. முதல்வர் போட்ட அதிரடி உத்தரவு… குஷியோ குஷி….!!!

நெல்லை மக்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய ஒரு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கொண்டுவர உள்ள தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதியால் நம்பி ஆற்றின் குறுக்கே அணை கட்டப்பட்டது. இந்த அணையின் கொள்ளளவு தற்போது பெய்த மழையால் நிறைந்து உபரிநீர் சுமார் 4700 அடி வரை வெளியேறி வருகிறது. இதனால் ஆத்தங்கரை பள்ளிவாசலில் இருந்து திசையன்விளை செல்லும் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த பகுதியில் சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு பாதிப்புகள் குறித்து நேரில் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது: “நம்பியாறு அணை முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால் கட்டப்பட்டது. தற்போது அணை முழு கொள்ளளவை எட்டி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஏற்கனவே முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், இப்பகுதியில் 5 கோடியே 22 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பாலம் கட்டுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் விரைவில் வெளியாகும். ஓராண்டு காலத்தில் பாலம் கட்டும் பணி முடிவடைந்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரும்” என்று அவர் தெரிவித்தார்.

Categories

Tech |