முன்னாள் ராணுவ வீரரை கொலை செய்த குற்றத்திற்காக வாலிபருக்கு நீதிபதி ஆயுள் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
தென்காசி மாவட்டத்திலுள்ள காலாங்கரை பகுதியில் முன்னாள் ராணுவ வீரரான விஜி மோகன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2014-ஆம் ஆண்டு விஜி மோகனுக்கும் அதே பகுதியில் வசிக்கும் பரமசிவன் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த தகராறில் மோகனின் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலி அறுந்து கீழே விழுந்தது. இதனையடுத்து தனது சங்கிலியை பறிப்பதற்காகவே பரமசிவன் தகராறு செய்ததாக மோகன் சிலரிடம் கூறியுள்ளார்.
இதனால் கோபமடைந்த பரமசிவனின் மகனான பண்டாரம் என்பவர் கடந்த 2015-ஆம் ஆண்டு மோகனை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பரமசிவனை கைது செய்துள்ளனர். இந்த வழக்கினை விசாரித்த தென்காசி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்ததோடு, 2,000 ரூபாய் அபராதமும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.