மோட்டார் சைக்கிள் மீது டெம்போ மோதிய விபத்தில் சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள இரணியல் கோட்டை பகுதியில் சிவகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். இந்நிலையில் சிவகுமார் தனது மோட்டார் சைக்கிளில் தொலையாவட்டம் நோக்கி புறப்பட்டுள்ளார். இதனை அடுத்து மாங்கரை பகுதியில் வைத்து பிரேம்ஸ் என்பவர் ஓட்டி வந்த டெம்போ சிவகுமாரின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதிவிட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சிவக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இதனையடுத்து நிற்காமல் சென்ற டெம்போவை பொதுமக்கள் மடக்கி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துவிட்டனர். அதன் பின் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிவகுமாரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.