மூதாட்டியிடம் இருந்த மர்ம நபர் தங்க சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள காரவிளை பகுதியில் ரோஸ் தங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் ரோஸ் தங்கத்தின் கடைக்கு பொருட்கள் வாங்குவது போல் வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.
இது குறித்து ரோஸ் தங்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நகையை பறித்து சென்ற மர்ம நபர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.