தமிழகத்தில் கொரோனா தொற்றின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் கடந்த வருடம் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. ஆனால் தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ளதால், 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டன. மேலும் பாடத்திட்டங்கள் 35% முதல் 50% வரை குறைக்கப்பட்டது.
மேலும் வாரத்தில் 6 நாட்கள் வரை பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இதனையடுத்து நடப்பு ஆண்டிற்கான 10 மற்றும் 12 ஆம் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இதனை மாணவர்கள் எளிதான வகையில் எதிர்கொள்ள கோவை மாவட்டம் பொதுத்தேர்வு போல திருப்புதல் தேர்வினை நடத்த கால அட்டவணையை முதன்முதலாக அறிவித்துள்ளது. இதனால் மாணவர்கள் எந்தவித தயக்கமின்றி பொதுத்தேர்வினை எதிர்கொள்வார்கள். இதன்படி முதலில் 9, 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை வெளியிட்டுள்ளது.
இதனை தொடர்ந்து 9, 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் டிசம்பர் 6 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை ஒரு பிரிவாகவும் மற்றும் டிசம்பர் 11ல் இருந்து 16 ம் தேதி வரை ஒரு பிரிவாகவும், தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மேலும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வருகிற டிசம்பர் 6ம் தேதி முதல் 13ம் தேதி வரை திருப்புதல் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இந்த திருப்புதல் தேர்வுகள் அனைத்தும் மதியம் 2:30 முதல் 4:00 மணி வரை நடத்த வேண்டுமென அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.