நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இந்த கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். தேர்தலுக்கு முன்னதாக தாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆட்சி அமைத்து மூன்று மாதத்திற்குள் கூட்டுறவு வங்கியில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் வாங்கிய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்திருந்தார்.
அதன்படி தற்போது தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும், கூட்டுறவு சங்கங்களில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் 2, 750 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது. 2021 மார்ச் வரை நிலுவையில் இருக்கும் கடன்கள் மற்றும் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.