தேவையானவை:
துருவிய இஞ்சி கால் கப்,
காய்ந்த மிளகாய்-4,
தேங்காய் துருவல் கால் கப்,
புளி சிறிதளவு,
உளுந்தம் பருப்பு ஒரு ஸ்பூன்,
கடுகு அரை ஸ்பூன்,
கடலைப்பருப்பு அரை ஸ்பூன்,
கருவேப்பிள்ளை , உப்பு, எண்ணெய் தேவையான அளவு.
செய்முறை:
கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்த மிளகாய், தேங்காய் துருவல் உளுந்தம் பருப்பு இஞ்சி ஆகியவற்றை வதக்கவும். இதனுடன் புளி, உப்பு ,சிறிதளவு நீர் சேர்த்து அரைக்கவும், இறுதியாக கடுகு , உளுத்தம்பருப்பு , கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும். இந்த துவையலை அம்மியில் அரைத்தால் மிகவும் சுவையாக இருக்கும் , இஞ்சி காரை துவையல் ஜீரண சக்தியை அதிகரிக்கும் உடம்புக்கு ரொம்ப நல்லது.