திடீரென பெய்த கனமழையால் 2 பேரின் வீடுகள் முழுமையாக இடிந்து விழுந்த நிலையில் 8 வீடுகளின் சுவர்கள் இடிந்து சேதமடைந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மழை ஓய்ந்து பகலில் வெயில் அடிக்க தொடங்கியுள்ளது. இதனால் குடியிருப்புகளை சுற்றி தேங்கிய மழைநீர் வெளியேறி மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். இந்நிலையில் மாவட்டத்தில் நேற்று திருஉத்தரகோசமங்கை பகுதியில் உள்ள நல்லிருக்கை கிராமத்தில் திடீரென கனமழை பெய்துள்ளது.
இதனால் அப்பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மற்றும் வெள்ளைச்சாமி ஆகியோரின் வீடுகள் மழையால் அடுத்தடுத்து முழுமையாக இடிந்து விழுந்துள்ளது. இதில் வீட்டில் இருந்த பொருட்கள் செய்தமைடைந்த நிலையில், அதிஷ்டவசமாக குடும்பத்தினர் காயங்களின்றி தப்பியுள்ளனர். மேலும் 8 வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வருவாய்த்துறையினர் சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.