எம்பில், பிஎச்டி பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்கும் தேதி டிசம்பர் 31ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் கால அவகாசத்தை பல்கலைக்கழக மானிய குழு நீட்டித்துள்ளது.
நாடு முழுவதும் கடந்த ஆண்டு பரவிய தொற்று காரணமாக பல்வேறு செயல்பாடுகள் தடைசெய்யப்பட்டது. மாணவர்களின் கல்வி, இளைஞர்களின் வேலை, பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்தும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக தொற்று தொடர்ந்து குறைந்து வருவதால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு கல்வி நிறுவனங்கள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி முறையில் வகுப்புகள் இயங்கிவருகின்றது. கடந்த மாதம் முதல் பள்ளி கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டாலும் பல்வேறு பாதுகாப்பு நெறிமுறைகளுடன் பள்ளி கல்லூரிகள் இயங்கி வருகின்றது.
அந்த வகையில் எம்பில், பிஹெச்டி பயிலும் மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு தலைப்பில் ஆய்வுக்கட்டுரை தயார் செய்து சமர்ப்பிக்குமாறு யுஜிசி அறிவுறுத்தப்படும். ஆய்வுக் கட்டுரைக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும். அத்தகைய கட்டுரை சமர்ப்பிப்பதற்கு வரும் டிசம்பர் 31ம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டது. ஆனால் தற்போது காரணமாக கொரோனா ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிப்பதற்கு வரும் 2022 ஜூன் 30ஆம் தேதி வரை அவகாசம் நீட்டித்து பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது.