உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ராஸ் அதானம் “ஒமிக்ரான்” வைரஸ் தொடர்பான பல கேள்விகளுக்கு விடை கிடைக்காததால் இன்னும் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் 24-ம் தேதி முதன் முறையாக தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட “ஒமிக்ரான்” வகை தொற்று தற்போது பிரிட்டன், இஸ்ரேல், ஹாங்காங், செக் குடியரசு, நெதர்லாந்து, போச்வானா ஆகிய பல்வேறு நாடுகளிலும் பரவ தொடங்கியுள்ளது. மேலும் “ஒமிக்ரான்” இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களை விட வேகமாக பரவும் தன்மை கொண்டிருப்பதாகவும், அதன் அறிகுறிகள் தீவிரத்தன்மை கொண்டதாகவும், கொரோனா தடுப்பூசியை எதிர்க்கும் தன்மை அதிக அளவில் கொண்டுள்ளதாகவும் விஞ்ஞானிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஜெனிவாவில் பேட்டியளித்த உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ராஸ் அதானம் ஒமிக்ரான் வைரஸ் தற்போது உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் உலக சுகாதார அமைப்பு “ஒமிக்ரான்” வைரஸ் வளர்ச்சி தொடர்பில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.