தொடர் மழையால் சேதமடைந்து இருக்கும் சாலையை அதிகாரிகள் ஊழியர்கள் மூலமாக சீரமைத்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையம் அருகாமையில் இருக்கும் சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகின்றது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக பெய்த தொடர் மழையால் சேதமடைந்த சாலைகளில் இருக்கும் பள்ளங்களில் தண்ணீர் தேங்கி அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதோடு, போக்குவரத்து பாதிக்கப்பட்டு வந்தது.
இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என தேசிய நெடுஞ்சாலைத்துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர். பின்னர் அதன் பேரில் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஊழியர்கள் மூலமாக சேதமடைந்த சாலைகளை சீரமைத்துள்ளனர்.