தமிழகத்தில் கடந்த ஒன்றரை வருடமாக கொரோனா பரவியதையடுத்து பள்ளிகள் அனைத்தும் முற்றிலுமாக மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டது. இதனை அடுத்து தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின் காரணமாக பாதிப்புகள் படிப்படியாக குறைந்து தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வெளிநாடுகளில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.
எனவே மைக்ரான் வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை கண்டிப்பாக சுழற்சி முறையில் மட்டுமே வகுப்புகள் நடைபெற வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. பள்ளிகளில் வகுப்புகள் நேரடியாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவும் நடத்தலாம். தளவாட பொருட்கள், கைப்பிடிகள், கதவுகள், ஜன்னல்கள் ஆகியவற்றை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். பள்ளிகளில் குளங்களை மூட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.