Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு…. பறந்த அதிரடி உத்தரவு…!!!!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஓமைக்ரான் வைரஸ் பரவலை தடுக்க இந்தியாவிலும் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பள்ளிகளில் ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டு இருந்த நிலையில் மாணவர்களுக்கும் ஒமைக்ரான் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று தலைமையாசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பபட்டுள்ளது.

அதில், அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். பள்ளிகளில் நேரடி வகுப்புகள் அல்லது தேவைப்பட்டால் ஆன்லைன் வகுப்புகளையும் நடத்தலாம். ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் உடல் பரிசோதனை மேற்கொண்ட பிறகே பள்ளிக்குள் அனுமதிக்க வேண்டும். கட்டாயம் அனைவரும் மாஸ்க் அணிந்திருக்க இருக்க வேண்டும். பள்ளி வளாகத்தில் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். பள்ளி வளாகத்தில் கூட்ட நெரிசல் இருக்கக்கூடாது. கூட்ட நெரிசல் நிறைந்த இறைவணக்க கூட்டம், விளையாட்டு நிகழ்ச்சிகள், கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது. நீச்சல் குளங்கள் இருந்தால் அவை செயல்படக்கூடாது. பள்ளிகளில் உடற்கல்வி விளையாட்டுகள் அனுமதிக்க வேண்டாம். மாணவர்களுக்கு ஒமைக்ரான் குறித்து விழிப்புணர்வை ஆசிரியர்கள் ஏற்படுத்த வேண்டும் இவ்வாறு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

Categories

Tech |