Categories
மாநில செய்திகள்

இனி இ-சேவை மையங்களில் இதுவும்…. அரசு வெளியிட்ட குட் நியூஸ்…!!!!

மக்கள் மத்திய, மாநில அரசின் சேவைகளை பெறுவதற்காக இ-சேவை மையங்களை தமிழக அரசு தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனம் வழியாக நடத்தி வருகிறது. இந்த மையங்கள் மூலமாக மக்கள் தங்களுக்கு தேவைப்படும் பிறப்பு சான்றிதழ், வருமான சான்றிதழ், ஆதார் பதிவு செய்தல், மின் கட்டணம் செலுத்துதல், சாதி சான்றிதழ் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட சேவைகளை பெற்று மக்கள்  பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது கூடுதலாக பல சேவைகளை இணைக்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் ஆளுமை முகமை அதிகாரிகள் கூறுகையில், மாற்றுத் திறனாளிகள் நலத் திட்டம், மீன்வளம், கால்நடை மற்றும் வருவாய்த்துறை திட்டங்கள், சாலை விபத்து நிவாரண உதவி, விபத்து நிவாரணத் திட்டம் உட்பட பல்வேறு சேவைகள், கிராம வரைபடம் விற்பனை, ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பித்தல், புதிய குடும்ப அட்டை பெற விண்ணப்பித்தல், முகவரி மாற்றம், சுவாமி தரிசனம் செய்ய முன்பதிவு செய்தல் உட்பட புதிதாக 90க்கும் மேற்பட்ட சேவைகளை இசை-சேவையில் இணைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.   எனவே மக்கள் இந்த சேவைகளை இ சேவை மையங்களில் விரைவில் பெற முடியும் என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |