லாட்வியாவில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கழிவுப்பொருட்களை கொண்டு உருவாக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரம் ஒன்று அனைவராலும் கவரப்பட்டு வருகிறது.
வருகின்ற 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையை முன்னிட்டு உலகின் பல்வேறு நாடுகளிலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கான ஆரவாரம், கிறிஸ்துமஸ் அணிவகுப்புகள், கிறிஸ்துமஸ் மரம் உள்ளிட்டவை தயாராகி வருகிறது. இந்நிலையில் கழிவுப்பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரம் ஒன்று லாட்வியா நாட்டின் தலைநகரான ரிகாவில் அனைவராலும் கவரப்பட்டு வருகிறது.
மேலும் இந்த கிறிஸ்துமஸ் மரம் கழிவுப்பொருள்களின் அளவை குறைக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கிறிஸ்துமஸ் மரமானது தலைநகர் ரிகாவில் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வைக்கப்பட்டுள்ளது.