வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் 164 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றுள்ளது .
இலங்கை-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 204 ரன்கள் குவித்தது .வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பின் வீரசமி பெர்மவுல் 5 விக்கெட்டும் , ஜோமேல் வாரிகன் 4 விக்கெட்டும் கைப்பற்றினர்.இதன்பிறகு களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 253 ரன்கள் குவித்தது.இதில் அதிகபட்சமாக கேப்டன் பிராத்வெயிட் 74 ரன்கள் குவித்தார் .இலங்கை அணி தரப்பில் ரமேஷ் மெண்டிஸ் 6 விக்கெட்டும், எம்புல்டெனியா மற்றும் ஜெயவிக்ரமா ஆகியோர் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர் .
இதன் பிறகு 2-வது இன்னிங்சை விளையாடிய இலங்கை அணி 9 விக்கெட் இழப்புக்கு 345 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது. இதில் அதிகபட்சமாக தனஞ்செய டி சில்வா பொறுப்புடன் விளையாடி 155 ரன்கள் குவித்தார் . இதன் பிறகு 297 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடியது .ஆனால் இலங்கை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது இதனால் 132 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இலங்கை அணி தரப்பில் எம்புல்டெனியா , ரமேஷ் மெண்டிஸ் ஆகியோர் தலா 5 விக்கெட் கைப்பற்றினர். இதனால் 164 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.