Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடைக்கு போகணுமா…? இத கட்டாயம் செய்யணும்…. அரசு போட்ட உத்தரவு…!!!

தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நபர்கள் ரேஷன் கடை, திரையரங்கு போன்ற பொது இடங்களுக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. தொடர்ந்து வாரம்தோறும் தடுப்பூசி முகாம்களை நடத்தி மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமென்று வலியுறுத்தி வருகின்றது. இன்றும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மதுரையில் தடுப்பூசி செலுத்தி கொள்ளாத நபர்கள் பொது இடங்களுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ரேசன்கடை, திரையரங்கு, வியாபார நிறுவனம், சூப்பர் மார்க்கெட், துணிக்கடை, வங்கி போன்ற இடங்களுக்கு செல்வதற்கு தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நபர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. முன்னதாக தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத பணியாளர்களுக்கு டிசம்பர் மாத ஊதியம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் தடுப்பூசி செலுத்தாதவர்கள் மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |