Categories
கிரிக்கெட் விளையாட்டு

132 வருடங்களுக்கு பிறகு ….! மும்பை டெஸ்டில் வரலாற்று சாதனை ….!!!

 132 வருடங்களுக்கு பிறகு  இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு 4 கேப்டன்கள் அணியை வழிநடத்தி வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக ரகானே பொறுப்பேற்றார்.இதன்பிறகு2-வது டெஸ்ட் போட்டியில் கேப்டன் விராட் கோலி மீண்டும் அணிக்குத் திரும்பினார்.அதேபோல் நியூசிலாந்து அணியிலும் முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டன் வில்லியம்சன் பொறுப்பெற்றார்.ஆனால் முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் 2-வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவில்லை.அவருக்கு பதிலாக டாம் லாதம் கேப்டனாக  செயல்பட்டார்.

இதனால் இதுபோன்று 2 டெஸ்ட் போட்டிகளுக்கு 4  கேப்டன்கள் அணியை வழிநடத்துவது கிரிக்கெட் தொடரில் மிகவும் அரிதாகும் .இதற்கு முன்பாக கடந்த 1889-ஆம் ஆண்டு இதேபோல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கு 4 கேப்டன்கள் அணியை வழிநடத்தியுள்ளன.அப்போது தென்னாப்பிரிக்காவுக்கு இங்கிலாந்து அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டது இதில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு ஓவன் டன்னல் , வில்லியம் மில்டன் என இரண்டு போட்டிகளுக்கு 2 கேப்டன்கள் இருந்தனர். அதேபோல் இங்கிலாந்து அணிக்கு ஆப்ரே ஸ்மித், மான்டி பவுடன் என            2 கேப்டன்கள் இருந்தன. இதனால் ஏறக்குறைய 132 வருடங்களுக்குப் பிறகு இதேபோல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கு 4 கேப்டன்கள் அணியை வழிநடத்தி வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.

Categories

Tech |