வட இந்தியாவில் வானில் மர்மமான முறையில் எரிந்த ஒளி போன்ற பொருளை கண்டு மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். வடஇந்திய மாநிலங்களில் நேற்று இரவு வானில் ஒளிபோன்ற மர்ம பொருள் சென்றதை கண்டு மக்கள் அச்சமடைந்துள்ளனர். பஞ்சாப், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் நேற்று மாலை சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தில் அதிக வெளிச்சத்துடன் கூடிய மர்மபொருள் வானில் சீறியப்படி சென்றதுள்ளது. இந்த அதிசய காட்சியை கண்டு பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். ஒரு சிலர் இந்த காட்சியை வீடியோ எடுத்து இணையதளத்தில் பதிவிட்டுள்ளனர்.
இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம், இது ஒரு செயற்கைக்கோள் எனவும், ஆதலால் இது தொடர்பான விவகாரத்தில் மக்கள் அச்சப்பட வேண்டாமெனவும் தெரிவித்துள்ளது. மேலும் இவை எலோன் மஸ்க் தலைமை நிறுவனமான ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் என்றும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.