ஒமிக்ரான் தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கும் பணியானது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு கர்நாடகாவில் 2 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மத்தியில் பயம் ஏற்பட்டுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைகளிலும் ஒமிக்ரான் தொற்று பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதாவது சென்னை, மதுரை, நெல்லை, திருப்பூர், கோவை, ஈரோடு, சேலம், திருச்சி, தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களிலும் சிறப்பு வார்டு அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த வார்டு குறைவான படுக்கைகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் அமைக்கப்பட்டு உள்ளது. அதேபோன்று நவீன ஆய்வகம், ஆய்வக நுட்புனர்கள் தயார் நிலையில் இருக்கின்றனர். எனவே இந்த வார்டில் அனுமதிக்கப்படுபவர்கள் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் இருப்பார்கள். இதற்கு தேவையான மருத்துவ குழுவினரும் தயாராக இருக்கின்றனர். ஆகவே நவீன மருத்துவ சோதனைகள் செய்யவும், உயிர்காக்கும் மருந்துகள் போதிய அளவு தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.