டிஎன்பிஎஸ்சி தேர்வு முறையில் மாற்றம் செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அரசுத்துறை சார்ந்த காலி பணியிடங்களை நிரப்புவதற்கு டிஎன்பிஎஸ்சி முறையில் தேர்வு நடத்தி அதன் மூலமாக பணியிடங்களை பூர்த்தி செய்வது வழக்கம். அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் 80 வகையான அரசு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றது. இதனால் ஒரு வருடத்திற்கு 80 வகை தேர்வு நடத்தப்பட்டு வருவதால் அத்தனை தேர்வுகளும் தேவையா? தற்போதைய சூழலுக்கு பொருந்தாத மாடல் என்பதால் தேர்வு முறையை மாற்ற ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக அவர் அறிவித்துள்ளார். இதனால் டிஎன்பிஎஸ்சி தேர்வில் பல்வேறு மாற்றங்கள் நடைபெறும் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.