நெல்லை ரெட்டியார்பட்டியில் 4 வழி சாலையில் நிகழ்ந்த விபத்தில் இரண்டு மருத்துவ கல்லூரி மாணவிகள் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டியில் இந்த விபத்து நடந்துள்ளது.. நெல்லையிலிருந்து நாகர்கோவில் நோக்கி பணி முடிந்து சென்ற 3 மருத்துவ கல்லூரி மாணவிகள், அதாவது இறுதி ஆண்டு மாணவிகள் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரியில் படித்து வருகிறார்கள்.. அவர்கள் அங்கிருந்து நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.. அவர்கள் சென்ற ஸ்கூட்டியின் மீது 4 வழிச்சாலையில் எதிரே வந்த கார் மோதியுள்ளது. அதாவது, நடுவே ஒரு தடுப்பு இருக்கிறது. அதை தாண்டி ஒரு கார் நிலைதடுமாறி, நடுவில் இருந்த தடுப்பை உடைத்து நாகர்கோவில் சென்ற மருத்துவ மாணவிகளின் ஸ்கூட்டியின் மீது மோதியது.. இந்த விபத்தில் 2 மாணவிகள் இறந்தனர்.
இதனைத் தொடர்ந்து மூன்றாவதாக உள்ள மாணவி பலத்த காயத்துடன் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.. காரில் வந்த ஓட்டுநரும் (சண்முகசுந்தரம்) சிகிச்சைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்தார்..
சண்முகசுந்தரம் நாகர்கோவிலில் இருந்து மதுரை நோக்கிசென்றுள்ளார்.. மருத்துவ மாணவிகள் திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்றுள்ளனர்.. 4 வழிச்சாலை, பிரதான சாலை ஆனாலும் கார் டயர் வெடித்ததன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக காவல்துறையினர் விசாரணையில் தெரிய வந்துள்ளது.. இரண்டு மருத்துவ கல்லூரி மாணவிகள் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது மாணவிகள் இருவரது உடல் சம்பவ இடத்தில் இருக்கிறது.. மாநகர காவல் ஆணையர் பார்வையிட வந்து கொண்டுள்ளார்.. அவர் வந்து விசாரணை நடத்திய பின்பு தான் அவர்கள் உடல்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..