Categories
தேசிய செய்திகள்

மக்களே….”ஒமிக்ரான் வைரஸ்”… எதிர்கொள்ள என்ன செய்ய வேண்டும்?… கொரோனா பணிக்குழு உறுப்பினரின் விளக்கம்….!!!

ஒமிக்ரான் வைரசை எதிர்கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பாக மாநில கொரோனா பணிக்குழு உறுப்பினர் விளக்கம் அளித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில் இந்த வைரசை எதிர்கொள்ள என்ன செய்வது என்று மாநில கொரோனா தடுப்பு பணிக்குழு உறுப்பினர் டாக்டர் வசந்த் நாக்வேகர் கூறியிருப்பதாவது “ஒமிக்ரான் தொடர்பாக நாம் பயம்கொள்ள வேண்டிய தேவையில்லை. எனினும் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும். இந்த புதிய வகை வைரசில் 50 மாறுபாடுகள் இருப்பதாக கூறப்படுவது கவலைக்குரியதாக இருக்கிறது. இதனிடையில் இந்த வைரஸ் அதிவேகமாக பரவக்கூடிய நிலையில் நோய் எதிர்ப்பு சக்தியை அழிக்க கூடியதாகவும் இருக்கலாம். ஆனால் ஒமிக்ரான் வைரஸ் அதிக பாதிப்பை ஏற்படுத்தியதாக தற்போது வரை எந்த ஆதாரமும் இல்லை.

தென் ஆப்பிரிக்காவில் இருந்து தற்போது வந்த தகவலின்படி இளம் வயதுள்ளவர்களை ஒமிக்ரான் வைரஸ் அதிகம் தாக்கி இருப்பது தெரியவந்துள்ளது. எனவே ஒமிக்ரானுக்கு எதிராக கண்காணிப்பு அவசியமானதாக கருதப்படுகிறது. மேலும் நாட்டின் எல்லை கண்காணிப்பு, மரபணு சோதனை மற்றும்  தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்த வேண்டும். இதனையடுத்து முககவசம் 53 சதவீதம், கொரோனா பரவலை தடுப்பதாக அறிவியல் தரவுகள் தெரிவித்துள்ளது. இதனிடையில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தினாலும் அது தற்காலிகம்தான் என கூறப்படுகிறது. ஒவ்வொரு புதுவகை வைரசுக்கும் 6 மாதத்திற்கு ஒருமுறை பூஸ்டர் டோஸ் செலுத்த முடியாது. எனவே முக கவசம் அணிவது அவசியமான ஒன்றாகும். அதன்பின் கட்டுப்பாடுகள் தவிர ஒமிக்ரான் தொற்று பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்துவது முக்கியமாகும்” என்று அவர் கூறினார்.

Categories

Tech |