Categories
சினிமா

மீண்டும் பிக்பாஸில் கமல்ஹாசன்….. வெளியான புதிய தகவல்…!!!

தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இன்று பிக்பாஸ் படப்பிடிப்பில் கமல்ஹாசன் கலந்து கொண்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

நடிகரும் மக்கள் நீதி மைய கட்சியின் தலைவருமான கமலஹாசனுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் நவம்பர் 22ஆம் தேதி தெரிவித்ததாவது: “அமெரிக்கா பயணம் முடிந்த பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப் படுத்திக் கொண்டேன். இன்னும் நோய் பரவல் நீங்கவில்லை என்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்” என்று அவர் தெரிவித்திருந்தார். பலரும் அவர் விரைவில் நலம் பெற்று திரும்ப வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வந்தனர்.

தற்போது அவர் பூரண குணம் அடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளதாக தகவல் வெளியாகியானது. இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து இன்று வீடு திரும்பிய கமல்ஹாசன் பிக்பாஸ் படப்பிடிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |