ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார்.
தென்ஆப்பிரிக்காவில் தோன்றியுள்ள ஒமைக்ரான் எனும் மாறுபட்ட கொரோனா வைரஸ் பரவல் பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வந்த நிலையில் தற்போது 38 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்தியாவை பொருத்தமட்டில் இரண்டு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஒமைக்ரேன் வகை கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக மத்திய மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இந்நிலையில் ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை செயலாளர் மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மேலும் ஆபத்தான நாடுகள் என குறிப்பிடப்பட்டுள்ள சில நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வரும் பயணிகளை விமான நிலையங்களிலேயே கடுமையாக சோதிக்க வேண்டும் எனவும், தீவிர பரிசோதனைக்கு பின்னரே அவர்கள் அனுமதிக்கப்பட வேண்டும் எனவும், அவர் கூறியுள்ளார். ஒமைக்ரேன் வகை கொரோனா வைரஸ் பாசிட்டிவாக இருக்கும்பட்சத்தில் அந்த நபர் மற்றும் அந்த நபருடன் நெருக்கமாக பழகி அவர்களை கட்டாயப்படுத்தி உட்படுத்த வேண்டும் எனவும், மேலும் இந்த வகை வைரஸ் வேகமாக பரவும் தன்மை கொண்டது என்பதால் கூட்டம் கூடுவதை அறவே தவிர்க்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.