மக்களை தடுப்பூசி செலுத்த வைப்பதற்காக தடுப்புசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே ரேஷன் பொருட்களை வழங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் முயற்சி எடுத்து வருகின்றது
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் என்ற இரண்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றது. இதனால் தமிழகத்தில் தொற்று பாதிப்பு 1000 த்துக்கும் கீழ் தினசரி குறைய தொடங்கியது. இன்னும் பலர் முதல் டோஸ் தடுப்பு ஊசியையும், கால அவகாசம் முடிந்து இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தாமல் உள்ளனர். இவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நோக்கில் தமிழகத்தில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அடுத்ததாக ஓமைக்ரான் வைரஸ் தொற்று பரவி வருகிறது.
இதனால் தடுப்பூசி செலுத்தாத மக்களை தடுப்பூசி செலுத்த வைக்கும் முயற்சியாக தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே ரேஷன் பொருட்களை வழங்கும் திட்டத்தை ஒரு வாரத்தில் செயல்படுத்த உள்ளதாக மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதனால் தடுப்பூசி செய்தவர்களுக்கு மட்டுமே பொருள்களை வழங்க உத்தரவு வெளியாகும் என்று தெரிகிறது. ஒருவாரம் அவகாசம் அளித்து இந்த திட்டத்தை அமல்படுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக அமைச்சர் பீ. மூர்த்தி தெரிவித்துள்ளார்.