Categories
மாநில செய்திகள்

பழம்பெரும் எழுத்தாளர் காலமானார்… பெரும் சோகம்…!!!

ஈழ இலக்கியத்தின் மிக முக்கியமான ஆளுமையாக விளங்கிய சே கணேசலிங்கன் இன்று சென்னையில் காலமானார். இவர் 40க்கும் மேற்பட்ட நாவல்கள், சிறுவர், இலக்கியம், சிறுகதைகள் உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். யாழ்ப்பாணத்தைக் மையமாக கொண்டு இவர் எழுதிய நீண்ட பயணம் என்ற புதினம் முக்கிய இடத்தைப் பிடித்தது. இந்த நூல் இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசினை பெற்றது.

மேலும் இவர் எழுதிய மரணத்தின் நிழல் என்ற நாவலுக்கு தமிழக அரசு விருது வழங்கி கௌரவப்படுத்தியது. சென்னை வடபழனியில் உள்ள தனது மகளின் இல்லத்தில் வசித்து வந்த கணேசலிங்கன் இன்று காலை இயற்கை மரணம் எய்தினார். இவரது இறப்பிற்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |