உத்தரபிரதேசத்தில் திருமண நிகழ்ச்சியில் தொடர்ச்சியாக நடனம் ஆடாத காரணத்தால் பெண் முகத்தில் துப்பாக்கியால் சுட்ட 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
உத்தரபிரதேச மாநித்தின் சித்ரகூட் பகுதியில் உள்ள திக்ரா கிராமத்தை சேர்ந்தவர் சுதிர் சிங்(45). இவர் அக்ககிராமத்தின் பஞ்சாயத்து தலைவராக இருந்து வருகிறார்.இவருடைய மகளின் திருமணம் போன மாதம் நவம்பர் 30-ந் தேதி வெகு சிறப்பாக நடைபெற்றது. அதில் கச்சேரியுடன்,மட்டுமன்றி நடன நிகழ்ச்சிக்கும் சுதிர்சிங் ஏற்பாடு செய்திருந்தார்.
இந்நிலையில் அன்று இரவு நடனக்குழுவை சேர்ந்த பெண்கள் நடனம் ஆடிக் கொண்டிருந்தனர். அங்கு பிரபலமான பாடல் ஒன்று இசைக்கப்பட்டது.அப்போது நடனமாடி முடித்த பெண்ணான ஹீனா தேவி(27) ஓய்வு எடுத்தார்.
பல்வேறு பாடல்களுக்கு தொடர்ச்சியாக நடனமாடிய காரணத்தால் சற்று நேரம் ஓய்வு எடுத்துக்கொண்டார். இதனால் கோபமடைந்த அடைந்த சுதிர்சிங் உறவினரான பூல் சிங்(50) என்பவர்தான் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியால் ஹீனா தேவியை நோக்கி கடுமையாக சுட்ட நிலையில் சுதிர்சிங்கும் துப்பாக்கியால் சுட்டார்.
இச்சம்பவத்தில் சுடப்பட்ட நடனப்பெண்ணான ஹீனா தேவியின் முகத்தில் துப்பாக்கி குண்டு சீறி பாய்ந்தது. இதனால் அவரது வாய் தாடையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. மேலும் சுதிர்சிங்கின் திருமண விழாவில் பங்கேற்ற அவருடைய உறவினர்களான மிதிலேஷ், கமலேஷ் என்ற இரு சிறுவர்கள் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்தது.
இச்சிறுவர்களின் கை மணிக்கட்டு மற்றும் காலிலும் காயம் ஏற்பட்டதை அடுத்து அங்கு பதற்றமும், பரபரப்பும் நிலவியது.எனவே திருமணத்துக்கு வந்தவர்கள் உயிரை காப்பாற்ற அந்நிகழ்ச்சியில் இருந்து ஓடினர்.இது குறித்து அப்பகுதி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, தலைமறைவான பஞ்சாயத்து தலைவரான சுதிர்சிங் மற்றும் அவருடைய உறவினர் பூல்சிங்கையும் கைது செய்தனர்.இதற்கிடையே காயமடைந்த ஹீனா தேவி லக்னோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.