லாட்வியா என்ற ஐரோப்பிய நாட்டில் விமானம் கட்டுப்பாட்டை இழந்து, ஓடுபாதையை விட்டு விலகி, பனிக் குவியலில் தரையிறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஸ்வீடன் நாட்டில் இருந்து லாட்வியா வழியே நியூயார்க் நோக்கி புறப்பட்ட ஏர் பால்டிக் என்ற நிறுவனத்தின் பயணிகள் விமானமானது, லாட்வியா நாட்டின் ரிகா விமான நிலையத்தில், தரையிறங்கியது.
அந்த சமயத்தில், குவிந்து கிடந்த பனிக்கட்டியில் சறுக்கிய விமானம், ஓடு பாதைக்கு அருகில் இருந்த பனிக் குவியல் மீது நின்றது. இந்த விமானத்தில் லாட்வியாவின் வெளியுறவுத்துறை அமைச்சரும் பயணித்தார். அவர் இந்த விபத்தால் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.