நியூசிலாந்து அணிக்கெதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் 2-ம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 69 ரன்கள் எடுத்துள்ளது .
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் குவித்தது . இதில் அதிகபட்சமாக மயங்க் அகர்வால் 120 ரன்கள் எடுத்தது அசத்தினார் .இதன் பிறகு இன்று 2-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது .இதில் களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 325 ரன்கள் குவித்தது. இதில் நியூசிலாந்து வீரர் அஜாஸ் படேல் இந்திய அணியின் அனைத்து விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார்.
இதன் பிறகு நியூசிலாந்து அணி தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது.ஆனால் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் நியூசிலாந்து அணி திணறியது. இதனால் 28.1 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 62 ரன்னில் சுருண்டது. இதில் இந்திய அணி தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டும் , முகமது சிராஜ் 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.இதனால் 263 ரன்கள் முன்னிலையில் இந்திய அணி தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது.இதனால் 2-ம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 69 ரன்கள் எடுத்துள்ளது .இதில் புஜாரா 29 ரன்னும், மயங்க் அகர்வால் 38 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.இதனால் 332 ரன்களுடன் இந்திய அணி முன்னிலை உள்ளது .