மீனவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பூப்பாண்டியாபுரம் பகுதியில் லட்சுமணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீன்பிடி தொழில் செய்து வந்துள்ளார். இவரது வீட்டில் ஏற்பட்ட குடும்ப தகராறில் மன வேதனையில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் லட்சுமணன் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனைப் பார்த்த லட்சுமணனின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்து இது குறித்து தாளமுத்துநகர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் லட்சுமணனின் உடலை உடனடியாக மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த தாளமுத்துநகர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.