லோடு ஆட்டோவில் புகையிலைப் பொருட்களை கடத்தி வந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லோடு ஆட்டோவை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அந்த சோதனையில் லோடு ஆட்டோவில் சட்ட விரோதமாக 7 மூடைகளில் 2 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருட்களை கடத்தி சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் புகையிலைப் பொருட்களை கடத்தி வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் அவர்கள் கோவில்பட்டி சாஸ்திரி நகர் பகுதியில் வசிக்கும் கண்ணன், மோகன்ராஜ் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் 2 பேரையும் கைது செய்ததோடு அவர்களிடமிருந்து 1 லட்சம் பணத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.