Categories
மாநில செய்திகள்

காய்கறி விலை கிடு கிடு உயர்வு…. விலை பட்டியல் இதோ…!!!!

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வரத்து குறைவு காரணமாக காய்கறி விலை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தக்காளி விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு கிலோ 150 வரை விற்பனை செய்யப்பட்டது. படிப்படியாக விலை குறையத் தொடங்கி ஒரு கிலோ 55 முதல் 70 வரையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதர காய்கறிகளின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.  நவீன் தக்காளி 85 ரூபாய் முதல் 90 ரூபாய்க்கும், நாட்டு தக்காளி 75 ரூபாய் முதல் 80 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பெரிய வெங்காயம் 30 ரூபாய் முதல் 36 ரூபாய்கும், சின்ன வெங்காயம் 45 ரூபாய் முதல்வ 65 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. அதிகபட்சமாக கேரட் 75 ரூபாய்க்கும், பீன்ஸ் 90 ரூபாய்க்கும், பீட்ரூட் 55 ரூபாய்க்கும், வெண்டைக்காய் 80 ரூபாய்க்கும், கத்தரிக்காய் 90 ரூபாய்க்கும், பாகற்காய் 50 ரூபாய்க்கும் கோயம்பேடு சந்தையில் விற்பனையாகிறது. இதுதவிர, புடலங்காய், பீர்க்கங்காய், கோவக்காய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், அவரைக்காய் 90 ரூபாய்க்கும் கொத்தவரங்காய் 50 ரூபாய்க்கும்,  நூக்கல் 80 ரூபாய்க்கும், பூண்டு 130 ரூபாய்க்கும், முருங்கைக்காய் 150 முதல் 180 ரூபாய்க்கும், ஒரு தேங்காய் 36 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Categories

Tech |