Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்…. தமிழகத்தில் மீண்டும்…. அரசுக்கு அவசர கடிதம் எழுதிய மத்திய அரசு….!!!

தமிழக அரசுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமானது ஒரு கடிதம் அனுப்பி உள்ளது. அந்த கடிதத்தில் இருந்ததாவது “அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடந்த நவம்பர் 27-ஆம் தேதியன்று வெளியிட்ட அறிவுறுத்தலின்படி, ஒமிக்ரான் அச்சுறுத்தலினால் வெளிநாட்டு பயணிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். இதனையடுத்து முக்கிய ஹாட்ஸ்பாட்களை தொடர்ந்து கண்காணித்தல் மற்றும் நோய்த்தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்த வேண்டும். அதன்பின் ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் மாதிரிகளை INSACOG ஆய்வகத்திற்கு விரைவாக அனுப்ப வேண்டும். அதிகப்படியான பரிசோதனைகள் செய்ய வேண்டும். சுகாதார உள்கட்டமைப்புகளை மறு ஆய்வுக்கு உட்படுத்துதல் போன்ற விஷயங்களில் கவனம் செலுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரையிலும் டிசம்பர் 3-ஆம் தேதியுடன் நிறைவடைந்த 30 நாட்களில் புதிதாக 23,764 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக வேலூர் மாவட்டத்தில் கடந்த நவம்பர் 19 முதல் 25 வரை 93 நபர்களுக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அதுவே நவம்பர் 26 முதல் டிசம்பர் 2 வரை 128 நபர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதன்மூலம் 37.63 சதவீதம் கொரோனா தொற்று அதிகரித்து இருக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தை பொறுத்தவரையிலும் நவம்பர் 19 முதல் 25 வரை 117நபர்களுக்கும், நவம்பர் 26 முதல் டிசம்பர் 2 வரை 136 நபர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

ஆகவே 16.24 சதவீதமானது கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. சென்னையை பொறுத்தவரையிலும் நவம்பர் 19 முதல் 25 வரை 845நபர்களுக்கும், நவம்பர் 26 முதல் டிசம்பர் 2 வரை 981 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் 16.09 சதவீதம் பாதிப்பு அதிகரித்து உள்ளது. இந்த மூன்று மாவட்டங்களிலும் பரிசோதனை, கண்டறிதல், சிகிச்சை, தடுப்பூசி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். இந்த விஷயத்தில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அனைத்து உதவிகளையும் செய்வதற்க்கு தயார் நிலையில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |