தகராறில் வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை அடுத்துள்ள நம்புதாளை பகுதியில் கன்சுல் மகரிபா என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள சாலையில் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது பல்லாக்கு ஒலியுல்லா தெருவை சேர்ந்த பிரேம்குமார் என்ற வாலிபர் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது வாகனம் கட்டுபாட்டை இழந்து கன்சுல் மகரிபா மீது மோதியுள்ளது. இதில் முதியவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதனை பார்த்த அதே பகுதியை சேர்ந்த பாஷா உசேன் என்பவர் பிரேம்குமாரை கண்டித்துள்ளார். இதனால் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பிரேம்குமார் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து பாஷா உசேன் தொண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.