படிகளுக்கு மேல் 19 லட்ச ரூபாய் மதிப்பிலான வெள்ளி தகடுகள் பதிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் பிரதித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மூலவர் பள்ளியறைக்கு செல்லும் படிகள் மற்றும் கல்பீடங்கள் உள்ளிட்டவை சேதமடைந்த நிலையில் இருந்தது. இந்நிலையில் சேதமடைந்த படிகட்டுகள் மற்றும் கல் பீடங்களை அகற்றி வெள்ளி தகடுகளை பதிப்பதற்கு உபயதாரர் ஒருவர் முன்வந்துள்ளார்.
அதன்படி சேதமடைந்த கல் பீடங்கள் மற்றும் படிகளை அகற்றிவிட்டு அதில் 29 கிலோ வெள்ளி தகடுகள் பதிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுள்ளது. இவற்றின் மதிப்பு 19 லட்சம் ரூபாய் ஆகும். கடந்த சில நாட்களாக நடைபெற்றுக்கொண்டிருந்த வெள்ளி தகடுகள் பதிக்கும் பணி தற்போது முடிவடைந்துவிட்டது.