Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திருடு போன செல்போன் மற்றும் மின்மோட்டார்…. உரிமையாளர் அளித்த புகார்…. கைது செய்த போலீஸ்….!!

மின்மோட்டார் மற்றும் செல்போனை திருடியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அழகேசபுரம் பகுதியில் சங்கரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாகராஜ் என்ற மகன் உள்ளார். இவர் லோடு ஆட்டோ மூலம் தண்ணீர் விற்பனை தொழில் செய்து வருகிறார். இவர் தனது லோடு ஆட்டோவை அந்தோணியார் கோவில் மார்க்கெட் அருகில் நிறுத்தி விட்டு சென்றுள்ளார். அதன் பின் திரும்பி வந்து பார்த்தபோது அந்த லோடு ஆட்டோவில் இருந்த மின்மோட்டார் மற்றும் செல்போனை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதனால் நாகராஜ் அதிர்ச்சியடைந்து இது குறித்து தூத்துக்குடி மத்தியபாகம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் செல்போன் மற்றும் மின்மோட்டாரை திருடி சென்றது சுந்தரவேல்புரம் பகுதியில் வசிக்கும் ராஜ்குமார் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் ராஜ்குமாரை கைது செய்ததோடு அவரிடமிருந்த மின்மோட்டார் மற்றும் செல்போனையும் பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |