Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! நிதிநிலை சீராக இருக்கும்..! எதிர்ப்புகள் விலகும்..!!

தனுசு ராசி அன்பர்களே..!
இறைவனின் அருளால் தொழிலில் லாபம் அதிகரிக்கும்.

வெளியுலகத் தொடர்பு விரிவடையும். எதிரிகளிடமிருந்து விலகியே இருங்கள். இன்று சந்திராஷ்டமம் உள்ளதால் எதிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பணத்தை பரிமாற்றம் செய்யும் பொழுது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். எடுக்கும் முயற்சியில் தெளிவாக இருக்க வேண்டும். தொழிலில் முன்னேறுவதற்கு கடுமையாக உழைக்க வேண்டும். யாருக்கும் வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம். ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். நிதி நிலைமையின் கவனத்துடன் இருங்கள்.

வேலைபளு அதிகரிக்கும். புதிதாக வேலை தேடுபவர்கள் வீண் அலைச்சல் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நல்ல உணவை உண்ணுங்கள். பேச்சில் அன்பினை வெளிப்படுத்துங்கள். தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுங்கள். குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை நிலவும். மாணவர்கள் ஆசிரியர்களிடமிருந்து கேட்டு தெரிந்துக்கொள்ள வேண்டும்.
முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணியவேண்டும். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே இன்று சூரிய பகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொண்டு வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 3 மற்றும் 6.
அதிர்ஷ்டமான நிறம்: ஊதா மற்றும் ஆரஞ்சு நிறம்.

Categories

Tech |