ஏரி மதகு உடைந்ததால் விவசாய நெற்பயிர்கள் அனைத்தும் நாசம் அடைந்துள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு பகுதிகளில் கடந்த 10 தினங்களுக்கு அதிகமாக பெய்த கனமழையின் காரணத்தினால் பெரும்பாலான ஏரிகள் நிரம்பி உள்ளது. இந்நிலையில் சர்வந்தாங்கல் எரிக மதகில் திடீரென உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏரியில் இருந்து நீர் விவசாய நிலத்திற்குள் புகுந்ததால் நெற்பயிர்கள் அனைத்தும் நாசமாகியுள்ளது.
இது பற்றி தகவல் அறிந்த ஆற்காடு தாசில்தார் கோபாலகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி, மாவட்ட உதவி கலெக்டர் பூங்கொடி ஆகியோர் பணியாளர்களை கொண்டு பொக்லின் மூலமாக உடைப்பு ஏற்பட்ட பகுதியில் மணல் மூட்டைகளை அடுக்கி சரி செய்துள்ளனர்.