Google pay செயலியில் தற்போது சில முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டு அப்டேட் ஆக உள்ளது.
அதாவது அடுத்த வருடம் ஜனவரி 1-ஆம் தேதி முதல் வாடிக்கையாளர்கள் தங்களுடைய கார்ட் விவரங்களை சேமிக்க இயலாது என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதில் குறிப்பாக கார்டு நம்பர் எக்ஸ்பயரி தேதி ஆகியவை கூகுள் செயலியில் சேமித்து கொண்டு முன்பு மாதிரி பண பரிமாற்றம் செய்ய முடியாது. ஏனெனில் இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய கார்டு ஸ்டோரேஜ், ஒழுங்கு முறைகளின்படி எந்த நிறுவனமும் கார்டு நெட்வொர்க் வாடிக்கையாளர்களின் கார்டு விவரங்களை சேமித்து வைக்கக் கூடாது என்று ஜனவரி 1- 2020 ஆம் ஆண்டிலேயே அறிவித்திருந்தது.
அந்த அறிவிப்பின்படி, ஜனவரி 1, 2022 ஆம்- ஆண்டு முதல் இந்த ஒழுங்குமுறையானது கடைபிடிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்தப் புதிய நடைமுறையால் பல்வேறு நிறுவனங்கள் குழப்பத்தில் உள்ளனர். ஒருமுறை மட்டும் சப்ஸ்கிரைப் செய்யும் யூசர்களுக்கும் இது அதிக சிரமத்தை ஏற்படுத்தும். அதனால் வேறு விதமான சிக்கல்கள் உருவாகலாம்.
Google pay செயலியில் இனி கார்டு விவரங்களை சேமிக்க முடியாது என்ற அறிவிப்பை கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. அதனால் உங்களின் கார்டு விபரங்கள் நீக்கப்படாமல் இருக்க வேண்டுமென்றால், சில வழிமுறைகளை செய்தால் போதும். மேலும் இந்த ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதிக்கு பின்னர் உங்களின் விசா அல்லது மாஸ்டர் கார்டு வசதி கொண்ட டெபிட் அல்லது கிரெடிட் கார்டு விவரங்கள் கூகுள் செயலியில் இருக்கிறதா என்று ஒருமுறை ரீ என்டர் செய்து உறுதி செய்ய வேண்டும்.
மேலும் 2021-ஆம் ஆண்டு தொடங்கியதும், அந்த கார்டு விவரங்களை ஒரு முறையாவது பதிவிட்டு ஏதாவது வாங்கி இருக்க வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால் உங்களின் கார்டு விவரங்கள் கூகுள் செயலியில் தோன்றாது. அதனால் உங்களின் கார்டு விவரங்களை மீண்டும் என்டர் செய்யவேண்டியிருக்கும். மேலும் ரூபே, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், டிஸ்கவர், டைனர்ஸ் கார்டு கொண்டவர்களின் காடு விபரங்களையும் டிசம்பர் 31- 2021க்கு பின்னர் கூகுள் நிறுவனம் சேமிக்க முடியாது. புதிய ஸ்டோரேஜ் கார்டு நடைமுறையின்படி, இந்த நடவடிக்கை பின்பற்றப்படும். மேலும் ஜனவரி 1 -2021 ஆம் ஆண்டிற்கு பின்னர் ஒவ்வொரு முறை பேமென்ட் செலுத்தும் போது உங்கள் கார்டு விபரங்களை சமர்பிக்க வேண்டியிருக்கும் என்று Google Pay நிறுவனம் அறிவித்துள்ளது.