நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக பரவி வந்ததையடுத்து, மாநில அரசுகள் தடுப்பூசி போடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்கும் விதமாகவும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதற்கிடையில் ஒமைக்ரான் என்ற புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனால் மாநில அரசுகள் தடுப்பூசி போடும் பணியை இன்னும் துரிதப்படுத்தும் விதமாக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
அந்த வகையில் கேரளாவில் கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் சம்பளம் இல்லாமல் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்று அந்த மாநில கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி தெரிவித்துள்ளார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், ஊழியர்கள் தடுப்பூசி போடாததால் பெற்றோர் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப அஞ்சுகின்றனர். அதனால் அனைத்து ஆசிரியர்களும் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.