Categories
மாநில செய்திகள்

17 வயது சிறுமியை…. தமிழகத்தில் தொடரும் பரபரப்பு சம்பவம்…!!!!

தமிழகத்தில் தற்போது பாலியல் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு அரசு தக்க தண்டனை கொடுத்தாலும் இன்னும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. இதனால் பெண் குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். இதுபோன்ற ஒரு சிலர் செய்யும் தவறுகளால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வெளியில் விடுவதற்கே அஞ்சும் சூழல் உருவாகி வருகிறது.

இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் 17 வயது சிறுமி ஒருவரை டுடோரியல் பள்ளி நிறுவனர் கர்ப்பமாகியதால் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அந்தியூரில் லோகநாதன் என்பவர் நடத்திவந்த டுட்டோரியலில் பத்தாம் வகுப்பில் தோல்வி அடைந்த மாணவி படித்து வந்துள்ளார். தேர்வில் தேர்ச்சி பெற வைப்பதாக கூறி லோகநாதன் சிறுமியுடன் அத்து மீறியுள்ளார். தற்போது அச்சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவர அவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |