தமிழகத்தில் கடந்த ஒன்றரை வருடமாக தீவிரமாக பரவி வந்த கொரோனா காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் 10,12 ஆம் வகுப்பு மனவர்க்ளுக்கு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்த நிலையில் மீண்டும் ஒன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் தொடங்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
எனவே இந்த வருடம் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழில் மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி எளிதில் கிழியாத, நீரில் அழியாத வகையில் செயற்கை இழையால் உருவாக்கப்படும் மேம்படுத்தப்பட்ட மதிப்பெண் சான்றிதழ்களை தேர்வுத்துறை வழங்குவதாகவும் இந்த புதிய முறை நடப்பு கல்வியாண்டு முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.