Categories
சினிமா தமிழ் சினிமா

பெரும் சோகம்! நடிகர் சத்யராஜின் தங்கை காலமானார்…. இரங்கல்…!!!!

தமிழக முன்னாள் அமைச்சர் மறைந்த நல்லதம்பி சர்க்கரை மன்றாடியார் மகன் அர்ஜூன் மன்றாடியார். இவர் திருப்பூர் மாவட்டம் காங்கயத்தை சேர்ந்தவர். இவர் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவருடைய மனைவி கல்பனா மன்றாடியார்(66). இவர் நடிகர் சத்யராஜின் உடன்பிறந்த தங்கை ஆவார்.

இந்த நிலையில் இவர் உடல்நலக் குறைவின் காரணமாக கடந்த ஒரு வருடமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார். இவருடைய இறுதிச்சடங்கு இன்று நடைபெறுகிறது. இவருடைய மறையவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |