Categories
உலக செய்திகள்

கொரோனா பரிசோதனை கட்டாயம்…. பிரபல நாட்டில் அதிகரித்த ஓமிக்ரான்…. பிரதமரின் அதிரடி உத்தரவு….!!

தென்னாப்பிரிக்காவில் உருமாற்றமடைந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்ததையடுத்து அமெரிக்க நாட்டின் அதிபரான ஜோ பைடன் வெளிநாடுகளிலிருந்து தங்கள் நாட்டிற்குள் நுழையும் பயணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவில் உருமாற்றமடைந்த கொரோனாவிற்கு ஓமிக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ளது. அந்த தொற்று மிக வேகமாக உலக நாடுகளுக்கு பரவி வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

இதனால் அமெரிக்க நாட்டின் அதிபரான ஜோ பைடன் வெளிநாடுகளிலிருந்து தங்கள் நாட்டிற்குள் நுழையும் பயணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.

அதாவது தங்கள் நாட்டிற்குள் நுழைய நினைக்கும் வெளிநாட்டு பயணிகள் ஒரு நாளைக்கு முன்பாகவே கொரோனா தொடர்பான தடுப்பூசியை முழுமையாக செலுத்திருந்தாலும் கூட பி.சி.ஆர் பரிசோதனையை கட்டாயமாக செய்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அதோடு மட்டுமின்றி அடுத்தாண்டு மார்ச் மாதம் வரை பொது போக்குவரத்தில் பயணம் செய்யும் அனைவரும் கட்டாயமாக முக கவசம் அணிவது தொடர்பான கட்டுப்பாடும் நீட்டிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |