தென்னாப்பிரிக்காவில் உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் தொற்றால் உலக ரீதியான பொருளாதார உயர்வு குறையக்கூடும் என்று international monetary fund நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவில் உருமாற்றமடைந்த கொரோனாவிற்கு ஓமிக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஓமிக்ரான் வைரஸ் உலக நாடுகள் அனைத்திற்கும் மிக வேகமாக பரவி வருகிறது. ஆனால் ஓமிக்ரான் கொரோனா வைரஸால் இதுவரை உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் international monetary fund நிறுவனத்தின் தலைவரான கிறிஸ்டினா முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது தென்னாப்பிரிக்காவில் உருமாற்றமடைந்த ஓமிக்ரான் பரவல் காரணமாக உலக ரீதியான பொருளாதார உயர்வு குறையக்கூடும் என்று தெரிவித்துள்ளார்.