சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 5 முக்கிய நாடுகள் ஜெர்மனியின் High risk areas என்னும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து, மொரிசியஸ் லிச்டென்ஸ்டின் ஜோர்டன் மற்றும் போலந்து போன்ற 5 முக்கிய நாடுகள் ஜெர்மனியின் high risk areas என்னும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. ஆகையினால் மேல் குறிப்பிட்டுள்ள 5 நாடுகளிலிருந்து ஜெர்மனிக்குள் நுழையும் வெளிநாட்டு பயணிகள் மிகவும் கடுமையான கட்டுப்பாடுகளை எதிர்கொள்ளவுள்ளார்கள்.
அதாவது high risk areas என்னும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள 5 நாடுகளிலிருந்து ஜெர்மனிக்குள் நுழையும் நபர்களுக்கு கொரோனா தொடர்பான சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமின்றி einreiseanmeldung.de என்னும் டிஜிட்டல் நுழைவு போர்ட்டலில் தங்களுடைய பயணத்திற்கான நோக்கம் உள்ளிட்ட பல முக்கிய ஆதாரங்களை பதிவிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.