16 வயது சிறுமியை கடத்தி சென்ற இளைஞனை காவல்துறையினர் கனடா எல்லையில் கையும் களவுமாக பிடித்து கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவில் Connecticut என்ற மாகாணத்தில் வசித்து வரும் 16 வயது சிறுமியை Christopher Jesus Constanzo ( வயது 19 ) என்ற இளைஞர் பாலியல் ரீதியாக தாக்குதல் நடத்தியுள்ளார். பின்னர் அந்த சிறுமியை காரின் பின்புறத்தில் அடைத்து வைத்த Christopher, Vermont கனடா எல்லை வழியாக காரை ஓட்டி சென்று கொண்டிருந்தார். அப்போது சோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அந்த இளைஞரை கையும் களவுமாக பிடித்துள்ளனர்.
இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் “அந்த சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி பின்னர் காரில் கடத்தியதாக” அந்த இளைஞர் கூறியுள்ளார். அதன் பிறகு காவல்துறையினர் Christopher-ஐ கைது செய்து காவலில் வைத்துள்ளனர். இருப்பினும் இந்த சம்பவத்தில் அதிகமான தகவல்கள் இன்னும் வெளிவராத காரணத்தினால் புதிய விஷயங்கள் விசாரணையின் முடிவில் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.