Categories
கால் பந்து விளையாட்டு

ஐஎஸ்எல் கால்பந்து : பெங்களூரு எப்.சி.யை வீழ்த்தி …. 3-வது வெற்றியை பதிவு செய்தது மும்பை ….!!!

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் நேற்று இரவு  நடைபெற்ற ஆட்டத்தில் வெற்றி பெற்ற மும்பை சிட்டி அணி 3-வது வெற்றியை பதிவு செய்தது.

8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி(ஐஎஸ்எல்) கோவாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட்-  எப்.சி.கோவா அணிகள் மோதின. இதில் 2-1  என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி முதல் வெற்றியை பதிவு செய்தது.

இதையடுத்து நடந்த மற்றொரு ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி – மும்பை சிட்டி அணிகள் மோதின. இதில் 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற மும்பை சிட்டி அணி 3-வது வெற்றியை பதிவு செய்தது .இதையடுத்து இன்று நடைபெறும் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ்-ஒடிசா அணிகள் மோதுகின்றன.

Categories

Tech |